தலைப்பைக் கண்ட உடன், புருவம் சுருக்கியவர்கள் இதைப்பற்றி கொஞ்சமும் தெரியாதவர்கள்(படித்த பின் ஒருவேளை தெரியலாம்), புன்னகை பூத்தவர்கள் என்னைப்போன்ற பாக்கியசாலிகள். எனது ஊரின் பின்புறம் மிகப்பெரிய கண்மாய் உள்ளது. எங்களுக்கு அதுதான் அலையில்லாத கடல்.அருகிலேயே குடிதண்ணீர் கிணறும் உண்டு.சிறிய வயதுகளில் கண்மாயின் கரையோரம் இருந்த புளிய மரங்களில் பேய்(பாரதி சொன்னது வேப்ப மரம்) இருப்பதாக கூறி கண்மாய் பக்கம் போவதை கவனமாக தடுத்திருந்தனர் என் பெற்றோர். முதல் முறையாக கண்மாய்க்கு அழைத்து சென்று கண்மாய் பற்றிய என் அறிவு கண்ணை திறந்தவர்(ன்) கண்ணன்.எதுவும் அவ்வளவாக நியாபகம் இல்லாத வயதுதான் என்றாலும், கண்மாயை கண்டு மிரண்ட பயம் இன்னும் இரண்டு ஜென்மத்திற்கு நியாபகம் இருக்கும். மொத்தமாக அவ்வளவு தண்ணீரை ஒரே இடத்தில் பார்த்தபோது வெறிநாய் கடித்தவன் தண்ணீரை கண்டு மிரள்வதை விட அதிக மாக மிரண்டு நின்றேன். கண்ணனோ என்னை ஆறுதல் படுத்தி உள்ளே அதிகம் வராமல் கரையிலே நின்னு குளிடா என்று சொல்லிவிட்டு அவன் உள்ளே இறங்கிவிட்டான். துவைப்பதற்கு பயன்படுத்தும் கல்லை இறுக்கமாக பற்றிகொண்டு காலை மெதுவாக தரையிருக்குமா என்ற சந்தேகத்துடனே உள்ளிரக்கினேன் நல்லவேளை சிறிது சகதியுடன் தரை தட்டுப்பட்டது.மற்ற காலையும் உள்ளிறக்கி ஒரளவு என்னை நிலைநிருத்திகொண்டே பற்றிய கல்லை பிரிந்தேன். என்னைவிட பெரிய பையன்கள் எனக்கும் மேலே பாய்ந்து நீரில் குதித்து கொண்டிருந்தனர், அதன் பின்விளைவாக நான் முக்கால் வாசி நனைந்து நின்றுகொண்டு இருந்தது எவன் கண்ணை உருத்தியதோ முழுதும் நனையட்டும் என நினைத்து, நான் பின்னால் இருந்து தள்ளப்பட்டு தண்ணீரில் தள்ளப்பட்டேன்.விழுந்த வேகத்தில் கண்மாய் நீரை தீர்க்கும் நோக்கில் வேகமாக குடிக்க தொடங்கி மூச்சு திணற தொடங்கினேன். யாரோ தலைமயிர் பற்றி என்னை மேல் இழுப்பது தெரிந்தது, இழுத்தது யார்னு பார்த்தால் அட நம்ம கண்ணன். ஏனோ அந்த நேரத்தில் என் பிரானை காப்பாற்றியதால் கெஜட்டில் அவன் பெயரை கண்ணபிரான் என மாற்ற சிபாரிசு செய்யவேண்டும் போல இப்ப தோன்றியது. கரையில் என்னை இழுத்து வந்து முதுகில் ஒரு அடி அடித்துவிட்டு(ஒரு வேலை குடித்ததண்ணீர் வெளியாகும் நோக்கத்தில் கூட அடித்து இருக்கலாம்), கரையில் நின்னு குளிடா என்றால் உன்னை யாருடா உள்ளே இறங்க சொன்னது என்று கேட்ட கண்ணனிடம் தண்ணீரில் தள்ளிவிடப்பட்டதையோ, தள்ளிவிட்டவன் பற்றியோ எதுவும் சொல்லவில்லை, சொன்னாலும் நம்ப மாட்டான் எனபது அவன் அடித்த அடியிலேயே தெரிந்தது. ஏறக்குறைய சாவின் பக்கத்தில் சென்று வந்தது போல இருந்தது. இவ்வளவு நடந்தும் கண்மாயின் மீதுகொண்ட பாசம் அதிகரிக்கத்தான் செய்தது. பின்னொரு நாள் அதிசயமாக கண்மாயில் குளிக்க கிளம்பிய அண்ணனிடம் என்னையும் அழைத்து கொண்டுபோகுமாறு அம்மா கூறியதை நம்பமுடியாமல் திகைத்து கொண்டிருந்த போதே, என் கை பற்றி தரதரவென இழுத்துக்கொண்டு அண்ணன் நடக்க தொடங்கியிருந்தான். என்னவோ என்மேல் சிறிய கடுப்புடன் அண்ணன் இருந்ததை அவன் கைபற்றுதலிலே அறிய கூடியதாக இருந்தது. என்னை பத்திரமாக் திருப்பி அழைத்து வரவேண்டு என்ற கவலையா, இல்லை நேற்று அவன் சட்டைப்பையில் நான் சுட்ட ஐம்பது பைசாவை கண்டு பிடித்து அதன் காரணமாக என்னை கூட்டி சென்று கண்மாயில் தள்ளி கொல்லப் போகிறானோ ...? , இவ்வாறன பல கவலையினூடையே கவலை இல்லாமல் கவலை பட்டு கண்மாயை வந்து அடைந்தேன். இவ்வளவு தைரியமாக என்னை கண்மாய்க்கு அனுப்பிய அம்மாவின் சூட்சுமம் கண்மாயை கண்ட உடன்தான் எனக்கு புரிந்தது. ஆம் வெய்யில் காலம் என்பதால் கண்மாய் தண்ணீர் எனக்கே கழுத்தலவுக்குத்தான்(அண்ணனுக்கு இடுப்பளவு(ஆழம் பிறகு கண்டுபிடித்தேன்)) இருந்தது.தண்ணீரின் அளவைக் கண்டதும் உயிர் பயம் குறைந்தது உண்மைதான். துவைக்க பயன் படுத்தும் கல் அதே இடத்தில் தான் இருந்தது கல்லில் இருந்து தண்ணீர்தான் இரண்டு நிமிடம் நடைதொலைவில் இருந்தது. மீதம் இருந்த தண்ணீரின் அளவு பயத்துடன் இருந்த என்னை இழுத்துக்கொண்டு தண்ணீரை நோக்கி அண்ணன் சென்றுகொண்டிருந்தான். அவனிடம் மெதுவாக பயமா இருக்குன்னே என்ற என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.அந்த சின்ன வயதிலேயே தினம் ஒருவனை அடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது, அடிபட்ட பையன்களின் அண்ணன்களிடம் இருந்து என்னை காப்பாற்றுவது அண்ணன்தான். என்னைப்பற்றி நன்றாக தெரியும் என்பதால் நான் பயந்ததை பற்றி அவன் அச்சர்யபட்டதில் எந்த தவறும் இல்லை. எனது பயத்தால் இப்போது அவன் முகத்தில் சந்தோசமும்,பரிதாபமும் சரிவிகிதமாக கலந்து ஒளிர்ந்ததை காணக்கூடியாதாக இருந்தது. பயப்படாதே நான் இருக்கிறேன் என்று என்னை அழைத்துக்கொண்டு தண்ணீரில் இறங்கியதையும் அவன் கைப்பற்றுதலில் உணரமுடிந்தது.ஒரு வழியாக தண்ணீரைப் பற்றிய பயம் விரைவாகவே என்னை விட்டு விலகிவிட்டது. ஒவ்வொருமுறை என்னை கரை ஏற்றுவதற்கு அண்ணன்தான் சிரமப்படுவான் அதிக நேரம் குளிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கண்டு பிடித்த(எனது முன்னோடிகள் வைத்த பெயர் இது) விசயம்தான் கள்ளக்குளிப்பு....! எளிதாக சொல்ல வேண்டும் என்றால் வீட்டுக்கு தெரியாமல் கண்மாயில் குளிப்பது கள்ளக்குளிப்பு ஆகும்.(பரிச்சையில் பதில் எழுதிய பாதிப்பாக இருக்கலாம்) கள்ளக்குளிப்பில் நிறைய விதிமுறைகள் உண்டு. விதிமுறைகளை மீறினால் வீட்டில் மிதிபடுவது நிச்சயம்.(நிறைய மிதிவாங்கித்தான் இந்த விதிகளை வகுத்தோம்). முதலாவதாக அணிந்து இருக்கும் உடுப்பு நனையக்கூடாது, இரண்டாவதாக கண் சிவக்கும் முன் கரை ஏறி விடவேண்டும், மூன்றாவதாக தலை காயும் முன்பே கைகளால் தலை முடியை சரிசெய்துவிடவேண்டும், நான்காவதாக வீட்டிற்கு வேகமாக ஓடி வரவேண்டும் (கண்மாய் நீர் என்பதால் காய்ந்தவுடன் முகத்தில் வெள்ளையாக காட்டி கொடுத்துவிடும், வேகமாக ஓடி வருவதால் வியர்வையில் வெள்ளை தெரியாது). கள்ளக்குளிப்பின் மீது கொண்ட அதீத பிரியத்தால் இந்த விதிமுறைகளை நான் மீறுவது இல்லை. சமீபத்தில் விடுமுறைக்காக ஊர் சென்று இருந்தேன் கண்மாயில் தேவையற்ற குப்பைகள், செடிகொடிகள் மண்டிக்கிடந்தன தண்ணீரை மட்டும் தான் காணவில்லை.ஆனாலும் கண்மாய் நீர் என் மனதிலும், இரத்தத்திலும்(அதான் நிறைய குடிச்சு இருக்கனே) அதிகமாகத்தான் உள்ளது.
திங்கள், 17 மே, 2010
செவ்வாய், 4 மே, 2010
சுறா.....புட்டு......
என்னத்த எழுதுறது, நம்பி,நம்பாமல் போன அனைவரையும் ஏமாற்றாமல்,ஏமாற்றி அனுப்பினர் விஜய் மற்றும் குழுவினர்(சண் தொலைக்காட்சிக்கு தமிழர்களின் மேல் உள்ள கடுப்பு மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகி உள்ளது). இப்படித்தான் படம் எடுப்பார்கள் என எதிர்பார்த்து போனதால் பெரிய பாதிப்பு இல்லை. இவர்களை குறை சொல்லுவதை விட்டுவிட்டு திரைப்பட மோகத்தில் இருந்து அனைவரும் விடுபட முயற்சிக்க வேண்டும்.(முடியாது......முடியவே ...முடியாது).வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து பொருட்களின் தரங்களை நிர்ணயிப்பது வியாபாரியின் கடமை. வியாபாரத்தில் வாடிக்கையாளனே முக்கியமானவன். படம் குப்பையாக இருந்தாலும் எவன் என்ன சொன்னாலும் கேட்க்காமல் முண்டியடித்துக்கொண்டு பார்க்கும் வாடிக்கையாளன் இருக்கும் வரை இவர்கள் கொட்டம் அடங்காது. மொத்த திரைப்படங்களில் பத்து விழுக்காடு நல்ல படங்கள் வருகின்றன. அந்த படங்கள் இந்த குப்பை வியாபாரிகளால் ஓரங்கட்ட படுவதும், இவ்வாறான படங்கள் அதிகமாக வருவதற்கு ஒரு காரணமாக உள்ளது. விஜய்க்கு என்ன பிரச்சினை யார் மேல் இவ்வளவு கோபம் தெரியவில்லை.இம்புட்டு கடுப்புடன் அலைகிறார்.இது அவருக்கு மட்டும் அல்ல நமக்கும் நல்லதல்ல. தமன்னாவை பற்றி ஏதாவது சொல்லலாம் என்றால் இந்தமுறை வெற்றிபெறும் ஒரு படத்தில் நடிக்கவில்லை என்றே தோன்றியது. இசை- ஏம்ப்பா உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி......? முடியல...! (காவல்காரன் எப்ப ரிலீஸ் ஆளில்லாத தீவு இப்ப இருந்தே தேடனும்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

