திங்கள், 18 மே, 2020

இறையுணர்ந்த கணம்


மூலனூரில் எனது வாழ்வியல் முற்றிலும் புதிதானது புதினங்கள் நிறைந்தது. 18 வருடத்தின் வாழ்வியலை தலைகீழாக மாற்றிய ஊர் அதுகொடுமுடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக தீர்த்த காவடி எடுத்து செல்வார்கள் 100 கிலோ மீட்டர் தூரம் நடக்கனும் போகின்ற வழிகளில் நிறைய தங்கல்கள் உண்டு

அங்கு கும்பத்திற்கு ஒருவர் கட்டாயம் காவடி எடுத்தே ஆக வேண்டும்காவடி சந்தா என்று மாதம் மாதம் முருகன்கோவிலில் இருந்து சந்தா வசூளித்து விடுவார்கள்எனது அண்ணனின்(பெரியப்பா மகன்காவடியை என்னைசுமக்க முடியுமா என்றான்எங்கப்பன் முருகனிடம் அவன் விரும்பினால் மட்டுமே அவனை காண முடியும் என்ற உண்மையை அறியாமலே ஓத்துக்கொண்டேன்

முதலில் எனக்கான உடை எடுக்க அண்ணன்(நீச்சல் பழக்கியவன்அழைத்து சென்று வேட்டி,சட்டை,துண்டு,உள்ளாடை முதற்கொண்டு காவியிலேயே வாங்கி தந்தான்.10 நாள் விரதம் தொடங்கியதுமுதல் நாள் அதிகாலையிலேயே குளித்து முருகனை நினைத்து பட்டையும்அடித்து காவியுடை அனிந்து கண்ணாடி முன் நின்று எனை பார்த்த நான் இதுவரை கண்டிராத நான் அதுஉள்ளுக்குள் ஏதோ மாற்றங்கள் நிகழ்வதை உணரக்கூடியதாகவே இருந்தது அண்ணன் என்னை பார்த்துவணக்கம் சாமி என்றான் இதையே நேற்று சொல்லி இருந்தால் சிரித்து இருப்பேன் ஏனோ அவ்வாறு தோணாதுஅவனுக்கு வணக்கம் சாமி என தங்குதடையின்றி சொல்ல முடிந்தது

பூசை அறைக்கு அழைத்து சென்று முருகன் படத்தில் இருந்த மாலைய எடுத்து எனக்கு போட்டு விட்டான்இன்று முதல் வீட்டினுல் போககூடாது,கட்டில்,நாற்காலிகளில் அமர கூடாது,போர்வை கிடையாது.மாற்றுஉடுப்பு கிடையாது முக்கியமாக செருப்பு அனிய கூடாதுஇவையனைத்துமே பாதயாத்திரைக்கு நம்மைதயாராக்குவதுதான்தேனீர் கடைகளில் தனியான குவளைகள்தான்அண்ணானு கூப்பிட மூன்று மாதங்களானஎனக்கு சிறு பிள்ளைகளுயும் சாமியென அழைப்பது மிக இலகுவாக இருந்தது

விரதம் முடிந்ததும் காவடிபக்தர்கள் அனைவரும் மூன்று லாரிகள் மூலமாக விடியும் முன்னரே கொடுமுடி காவேரி ஆற்றின் கரையில் சுமார்250 சாமிகள் குவிந்து இருந்தோம். 10 வயது முதல் 60 வயது வரை ஆண்கள் பெண்கள் என கலவையானகூட்டம் அதுஏனோ தெரியவில்லை அத்துனைபேரும் ஒரே மாதிரியாக நெடுநாள் பழகியது போல உணர்வுதான்மேலோங்கி இருந்ததுயாத்திரைக்கான நிர்வாக தலைவர் உண்டு உறுப்பினர்களும் உண்டு இவர்கள் வேலைபக்தர்களை ஒழுங்கு படுத்துவது,சாப்பாடு ஏற்பாடு செய்வது.தங்குமிடங்களை தெரிவு செய்வது என சொல்லிக்கொண்டே போகலாம்

கலசங்களில் காவேரி ஆற்றின் நீர் கொண்டு நிரைத்து வாழை இலையால் கலசத்தைமூடி நாரால் கட்டி அதன் மேல் முருகன் படம் போட்ட துணியாலும் கட்டி இறுதியாக கலசத்தின் கலுத்தில் வடகயிறால் கட்டினோம்கலசத்தை தலையில் வைத்தும்,தோளிலும் சுமந்து செல்ல வட கயிரு பயன் படும்

எங்கப்பன் முருகனுக்கான யாத்திரை இனிதே தொடங்கியதுமுதல் முறை என்பதால் வட கயிரின்இருமுனைகளையும் தோளிர்க்கு அளவாக கட்டி தோளிலே தொங்க விட்டார் தோழர் சாமிதோழர் சாமி பெயர்வரதன்என்னை விட மூன்று வயது பெரியவர் அண்ணனின் நன்பர்ஒரு ஒரு தலைமை காவடி உண்டு படங்களில்காண்போமே அதே போன்று ஆனால் மிக கனமானது தூக்குவதற்கு லாவகம் வேண்டும்அவர் முன்னால் செல்லமகுடேஷ்வரர் ஆலையத்தில் அவரை தரிசத்த பின் எங்கள் பயணம் முதல் தங்கலை நோக்கி நகர்ந்தது

இப்போது வயதுக்கு தகுந்தவாறும் வலிமைக்கு தகுந்தவாறும் அணிகளாக பிரிந்து இருந்தோம்நான் வரதனின்அதிவேபடையிலிருந்தேன் எங்களில் மொத்தம் ஐந்து பேர்கடைசியாக கிளம்பி எல்லோருக்கும் முன்னதாகதங்கலை அடைவதே எங்கள் அனியின் சிறப்பாம்கிராமங்கள் வழியாகவே பயணம் இருந்ததுஐந்து கிலோமீட்டர் நடந்ததும் இளைப்பாருவதற்காக தேனீர் கடை முன்பு துண்டை விரித்து கலசங்களை வைத்த பின்னரேகளைப்பு மூலைக்கு தெரிந்ததுதலை வலித்தது போட்டுக்கொண்ட வீரன் வேடம் யாரிடமும் சொல்ல விடாமல்தடுத்தும் விட்டதுமற்றவர்கள் முகத்தில் அணுவளவும் அயர்ச்சி இல்லாது வியப்புதான் எனக்குஒரு மாதிரியாகமுதல் தங்கலை வந்தடைந்தோம்

உடம்பில் அத்துனை உறப்பும் வஞ்சனை இல்லாது வலித்ததுவரதன்என்னிடம் எதுவும் வினவாமல் கை கால் உடம்பு என மிக லாவகமாக பிடித்தவர் தலையை தொட்டவர் எப்போது இருந்து தலைவலி என வினவிய கணம் அன்பு அழுகையாக வெடித்தது 18 வயது முரடனுக்கு அழுகை வருமா? வரும். 17 கி.மீ நடையில் உடல் வலித்த வலிக்கு எப்படி இலக்கை சென்றடைவேன் என்ற பயத்தில்இருந்தவனை வரதனின் இந்த வார்த்தைகள் அம்மா வை அவரில் பார்க்க வைத்தது அதுதான் அழுகைக்குகாரணம்என்ன சாமி சின்ன பிள்ள மாதிரி இதுலாம் ஒன்னுமில்ல முதல் முறையாக நடப்பவர்களுக்கு வலமைதான் என்று என்னை சமாதன படுத்திக்கொண்டே தலையை பிடித்து விட்டுக்கொண்டு இருந்தார்அவர்பிடித்தலில் ஒரு நேர்த்தியும் அக்கரையும் இருந்ததுஎனக்காக தேனீர் எடுத்து வந்தார்எனது அயர்ச்சிமொத்தமாக தீர்ந்தது போல் இருந்தது

அடுத்த நாள் அதிகாலை மீண்டும் பயணம் தொடங்கியதுஇன்று எங்கள்அனியில் ஐந்து பெண் சாமிக்களும் இணைந்து இருந்தனர்எங்கள் ஒரே அணி ஐந்து உள் அணியாக பிரிந்துபேசிக்கொண்டே நடந்தோம்எனது தோழி சாமி எனது நிலையை கணக்கில் கொண்டு பல நேரங்களில் எனதுகலசங்களையுமே சேர்ந்து சுமந்தவராக என்னையும் ஊக்குவித்து வழி நடத்தினார்இயல்பான கொங்கு தமிழ்அவருடையது மிக அழகாக இருக்கும் அவரை போலவேகாவி தரித்தால் என்னவோ தெரியவில்லை பெண்ணாக தனித்து தெரியவில்லைஅடுத்து வந்த நாட்களில் தோழி சாமியிடம் ஒரு சோர்வை உணர முடிந்தது இப்போதுநான் தேறிவிட்டேன் உடம்பு பழகிவிட்டது எனவே தோழி சாமியை கவணமாக பார்த்து கொண்டேன்.

 புளியம்பட்டியில் அய்யனார் கோவிலில் ஒரு தங்கல் உண்டுஅது கொஞ்சம் பிரசித்து பெற்றதுஏனெனில் அங்குசாமியாடி குறி சொன்னால் 100% பலிக்கும்இன்னொரு சிறப்பு யார்மேல் சாமி வரும் என்பதும் தெரியாதுதப்பின் வேகமும் குலவையின் வேகமும் அதிகரிக்க எங்கள் ஐவரனி சுற்றம் முற்றும் யாருக்கு சாமி வருமென்று தேடினோம்ஏனெனில் அவரை கட்டுபடுத்தி சாமி ஆட வைக்க வேண்டும்அரோகரா ஒலியின் அளவும்அதிகரிக்க எனக்கு முன் இருந்த சாமியின் மூச்சு காற்றின் ஒலி அதிகமானது சுதாரிப்பதற்குள் துள்ளினார் மான்போல வேகமாக நானும் வரதன் சாமியும் அவரின் இரு கைகளையும் பிடித்து கொண்டோம்நினைத்தது போலஅவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை அவரை பிடிப்பதுதிமிறினார் காளை போல நான் பற்றி இருந்தஇடங்களில் அவரது நரம்புகள் இரும்பு கம்பிகளாக உணரக்கிடைத்ததுஎனது அரோகரா சத்தத்தின் அளவும்அதிகரித்து எனது உடம்பிலும் மனதிலும் அடைந்த பரவசத்தில் எங்கப்பன் முருகனை என்னுள்உணரக்கிடைத்தது. என் வாழ்க்கையில் முதல் முதலாக இறைவனை உணர்ந்த தருணம் அது.

இதோ வந்து விட்டோம் பழனி அடிவாரத்திற்குமடத்தில் தங்கி அடுத்தநாள் மலையேறினோம்கோவிலின்பிரகாரக்தில் அணைவரின் கலசங்களும் காட்சி படுத்த பட்டது. 10 நாள் பயணத்தில் கலசங்களின் நீரின்அளவுகளை கொண்டு அந்த வருடத்தின் பலன்களை கணித்துக்கொள்ள முடியும்வரிசையில் நின்று இதோஎங்கப்பன் முருகன் முன் நிற்கிறேன் பித்து பிடித்த நிலை அது எப்படி விவரிக்கவென்று தெரியவில்லை முடிந்தால் அனுபவித்து பாருங்கள் புரியும்எல்லாம் முடிந்து உள் பிரகாரத்தில் வந்தமர்ந்து கோபுரத்தை பார்த்தவண்ணமாக இருந்தேன் இதயம் இழகி கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.
                            
                அரகரா அரகரா அரோகரா.🙏

புதன், 13 மே, 2020

அப்பா நடராசன்(V.N.Rasan)


  1. அப்பாவை பற்றிய முதல் நியாபகமாக 
  2. அவருடன் அரை தூக்கத்தில் மிதிவண்டியின் 
  3. பின் அமர்ந்து அதிகாலைஐந்து மனிக்கு 
  4. அவருடைய தையல்கடைக்கு செல்வது பிடிக்கும்
  5. இரண்டு காரணம் உண்டுஒன்று மிதிவண்டிபயணம் 
  6. மற்றது காஜா கடை தேனீரும் சூடான 
  7. பணியாரமும்தான் பல் துளக்காமல் சாப்பிடுவது இன்னும்பிடிக்கும்

  8. நல்ல பக்திமான்நெற்றியில் பட்டை இல்லாமல் 
  9. அப்பாவை காண்பது கடிணம்.நானுமே 
  10. பத்தாவதுபடிக்கும் வரை பட்டையடித்தே 
  11. பள்ளிக்கு போவேன்பட்டைமேல் உள்ள 
  12. விருப்பத்தை விட அப்பா மீது அன்புஅதிகம்

  13. அப்பா எனக்கு வைத்த செல்ல பெயர்
  14.  “ராகுகாலம்”. மூன்று அக்கா(அம்மா)விற்கு 
  15. பிறகு கடைசியாகபிறந்ததால் செல்லம் 
  16. அதிகம்.அப்பா பாசத்தை அதிகம் காட்டி 
  17. கொள்ள மாட்டார்.ஆனால் வீடு 
  18. நுழைந்ததும்எங்கே அந்த ராகுகாலத்தை 
  19. கானோம் என்பார்.

  20. சின்ன வயதில் நிறைய சேட்டைகள் 
  21. பன்னுவேன் விளைவு அப்பாஅடிக்க 
  22. துரத்துவார் கனத்தில் ஓட்டு கூரையின் 
  23. மேலே ஏறிக்கொள்வேன் அவரின் 
  24. ஒவ்வொரு திட்டிற்கும் ஒருஓடை 
  25. உடைப்பேன் வேறு வழி இல்லாமல் 
  26. இன்னும் திட்டினால் செலவு கூடும் 
  27. என்று விட்டு விடுவார் வழக்கம்போல 
  28. சமாதான புறா அம்மா மூலம் 
  29. ஓட்டிற்கான பைசாவையும் வாங்கி 
  30. நானே ஓட்டையும் மாற்றி விடுவேன் 
  31. ஓடுமாட்டுவதற்கு தனியே காசும் 
  32. வாங்கி கொள்வேன்

  33. எனது பதிமூன்று வயதில் ஒரு முறை 
  34. அப்பாவிடம் வசமாகமாட்டி கொண்டேன் 
  35. அடியின் வலி தாங்க முடியவில்லை
  36. (அவ்வளவாக அடி வாங்கி பழக்கமும் இல்லைஎனக்குகோபத்தில் செய்வதறியாமல் 
  37. பக்கத்தில் இருந்த விறகு கட்டையை 
  38. எடுத்து கொண்டு இன்னொரு அடி அடிச்ச 
  39. மன்டையை உடைப்பேன்(அப்பா அம்மா 
  40. நான் மட்டும் அடிக்கடி மகூபா தியேட்டரில் 
  41. படம் பார்த்த விளைவாகஇருக்கலாம்
  42. என்றேன் அப்பா என்னை ஒரு முறை 
  43. உற்றுப்பார்த்தார் இன்று வரை என்னால் 
  44. அந்த பார்வைக்கானஅர்த்தத்தை கண்டுபிடிக்க முடியவில்லை

  45. அன்று முதல் அவர் வாழ்வின் இறுதிவரை 
  46. அடிக்கவும் இல்லை திட்டவும்இல்லை.
  47. இரண்டு அல்லது மூன்று நாட்கள் அப்பா 
  48. என்னுடன் பேசவில்லை பார்வையிலும் 
  49. வெருப்பு இருக்காதுஎனக்குள் பல கேள்விகள் 
  50. அடித்து இருந்தாலும் அன்றோடு மறந்து 
  51. இருப்பேன் அப்பா பேசாமல் இருந்ததுநிறைய 
  52. வலித்தது அப்பா அடிக்காக பயப்படும் நான் 
  53. முதல்முறையாக அடிக்காததற்கு பயந்து சமதான புறாவிடம்தூது போக சொன்னேன் புறாவிற்கு 
  54. பயமா விருப்பம் இல்லையா என தெரியவில்லை 
  55. முடியாது என்றது. 

  56. முடிவுசெய்துவிட்டேன் 
  57. நானே அப்பாவிடம் மன்னிப்பு கேட்பதாக
  58. பள்ளி முடிந்ததும் நேராக அப்பா கடைக்குசென்றேன்.தைத்து கொண்டிருந்தவர் 
  59. வீட்டுக்கு போகலயா ஏதும் வேனுமா என்றார்
  60. வார்த்தை வரவில்லைஅழுகைதான் வந்தது 
  61. அப்பா பதட்டப்படாமல் உள்ள வா என்று 
  62. கடைக்குள் அமர வைத்து நான் 
  63. அழுதுமுடித்தவுடன் காஜா கடைக்கு போவோமா 
  64. என்றார் அத்துனையும் மறந்து வேகமாக 
  65. தலையாட்டினேன்.

  66. அன்றுமுதல் எனக்கு 
  67. தோழனாக என்னை வழி நடத்தினார்
  68. தாத்தா அப்பா பெரியப்பா என அணைவரும் கம்யூனிஸ்ட்என்பதால் கடையில் நிறைய 
  69. புத்தகங்கள் வைத்து இருப்பார் படிக்க 
  70. சொன்னது இல்லை நானாக நிறையபுத்தகங்கள் 
  71. படித்து உள்ளேன்

  72. பள்ளிக்காக ஏதாவது பணம் கேட்டால் உடனே 
  73. தரமாட்டார் நாளை வாங்கிகொள் என்பார். பைகாசு(பாக்கெட் மனிகேட்டால் 
  74. சாப்பாட்டு இடை வேலைக்கு அவர்வீடு சென்ற 
  75. பிறகு கடையில் உட்கார்ந்து ஏதாவது வேலை 
  76. செய்தால் மட்டுமே காசு தருவார்உழைப்பின்
  77. உன்னதத்தை பயிற்றுவித்த ஆசான் அவர்.

  78. என்மேல் நிறைய நம்பிக்கை உண்டு 
  79. நான் தவறு செய்யவே மாட்டேன்என்ற அளவிற்கு 
  80. நம்பினார் அதுபோலயே நானும் இருக்கிறேன் 
  81. இறுதிவரையும் இருப்பேன் என்றே நம்புகிறேன்.
  • இன்னும் இன்னும் அவரை பற்றி எழுதனும் எழுதுவேன்.

புதன், 29 ஜனவரி, 2020

2.0........

வணக்கம் சிறிய(10வருடம்) இடைவெளியின் பின் மீண்டும்


முக்கிய நோக்கம்


தற்போதைய புகைப்படம் பதிவேற்றம்









திங்கள், 18 அக்டோபர், 2010

பிரிதலின் கனமான கணங்கள்.....

                 "பிரியும் கணத்தில் , துளிர்த்த கண்ணீரை,   நான் அறியாதவனாக நினைத்து, கண்ணுக்குள் கண்ணீரை கவனமாக மறைத்தாயே, அந்தக்கண்ணீரில்   கரைந்து காணாமல் போனேனே."  அனேகமாக எனது பதின் பருவத்தில் எழுதியது  இது. யாரை பற்றி என்ற ஆராய்ச்சி இப்போது தேவை இல்லை என்றே கருதுகிறேன்.  பல காலகட்டங்களில் பல்வேறு மனிதர்களின் பிரிவுகளை சந்தித்து உள்ளேன். பிரிவின் வலி கண்டிப்பாக அனைவருக்கும் தெரியும்,சமீபத்தில் சிலரின் தற்காலிக பிரிவை சந்திக்க நேர்ந்தது அதனை பற்றி இனி...                                                                                        பி.மு மூன்றாம் நாள்:-      ஆகா இன்னும் மூணு நாளுதான் இருக்கா..?  தோழருக்கு தொலை பேசுவோமா..? இல்லை வேண்டாம் போற நேரத்தில் நிறைய ஓட்டினால் பிரிந்த பின் வலி அதிகமாகும் என்று புத்தி சொன்னதை மனது என்றுதான் கேட்டது, தோழருக்கு தொலை பேசியில் அழைத்தேன். வழக்காமான பேச்சு துள்ளலில் சற்று குறைந்ததை உணரக்கூடியதாக இருந்தது, ஒருவேளை எனக்கு அவ்வாறு தோன்றி  இருக்கலாம் இல்லை போகும் நேரத்தில் நிறைய ஓட்ட கூடாது என அவரும் என்னைப்போல் நினைத்துஇருக்கலாம்.                                                                                                                                                                                பி.மு இரண்டாம் நாள்:-   நிறைய வேலை இருந்ததால் மனதை எளிதாக புத்தி ஏமாற்றியது இன்று முழுவதும் தோழரை சந்திக்கவில்லை.                                                                    பி.மு முதல் நாள்:-     இன்றும் வேலை அதிகம்தான் மனதை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்று நண்பன் வீடு சென்றபோது அங்கு தோழரை கண்டவுடன் புத்தி தடுமாறியது, மனது துள்ளியது.ஓரிரு நிமிடங்கள் புத்தி வேலை செய்யாமல் இருந்தது உண்மை. அன்று நண்பன்,தோழருடன் கடைகள் சென்று பொருள் வாங்கி நண்பன் வீடு வந்தபோது நள்ளிரவு பனிரெண்டு ஆனது. தோழரை வழமையாக அவரது வீட்டில் இறக்கி விட்டு வாகனம் விடும் பரந்த வெளியில் குறைத்து ஒரு மணி நேரம் அதிகமாக கணக்கு இல்லை நிறைய நேரம் பேசிக்கொண்டு இருப்போம். உடல் அசதியை புத்தி தனது ஆயுதமாக பயன்படுத்தியது அதில்  ஓரளவு வெற்றியும் கொண்டது, நண்பன் வீட்டில் இருந்து கிளம்பும்போது தோழரை வீட்டில் இறக்கிவிட்டவுடன் உடனே திரும்பிவிட நினைத்துகொண்டேன். தோழரின் வீடு வந்ததும் ஒரு ஐந்து நிமிடத்திற்காக மனது புத்தியிடம் மன்றாடியது,முதல் முறையாக புத்தி இறக்கப்பட்டு ஐந்து நிமிடம் மட்டும் பேசுவதற்கான அனுமதி வாங்கியது. ஆனால் மனது பேசிக்கொண்டே இருந்ததில் புத்தியின் அலறல் எதுவும் அதன் காதில் விழவில்லை இறுதியாக மனது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தோழருடன் பேசிக்கொண்டு இருந்தது.                                                                                                                                                                                           பிரிந்த நாள்:-  " மாடு முட்டியவனை, யானை மிதித்ததுபோல"  என்ற பழமொழியை பக்கத்து நாட்டு தோழன் அடிக்கடி சொல்வது உண்டு. பழமொழிக்கு ஏற்றாற்போல் தோழர் கிளம்பிய அதே நன்(?) நாளில் நண்பனின் குடும்பமும் விடுமுறைக்காக ஊர் செல்வதாக இருந்தது. முதல் முறையாக புத்தி மனது இரண்டும் இயங்கவில்லை.  விமான நிலையத்தில் தோழரை தழுவியபோது உள்ளே நிறைய உடைந்தது உண்மை(தழுவலின் இறுக்கத்தில் எலும்பு ஒன்றும்  உடயவில்லை மனதுதான்....!). அய்யோடா இனி தோழரை தற்காலிகமாக சந்திக்க முடியாதை நினைத்து இதயம் விம்மியதை யாராலும் அறியத்தான் முடியவில்லை. அடுத்த மூன்று மணிநேரத்தில் நண்பனின் குடும்பமும் கிளம்பியது. ஒருவழியாக யானையும் மிதித்து முடிந்தது. தோழர் பிரிவின்போது பிரிவை பற்றி ஒரு குறுஞ்செய்தி ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தார் அவர் தமிழில் அனுப்பிஇருந்தாலும்புரிந்துகொள்ளும்மனநிலையில்இல்லைநான்என்பதேஉண்மை.                                                                                                                         பி.பி.முதல்நாள்:-    நல்லபடியாக ஊர்சென்றதாக நண்பன் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான், நான் நினைத்தது போல தோழர் அப்படி ஏதும் அனுப்பவில்லை. எப்படியும் மனசு லேசான உடன்  கண்டிப்பாக அனுப்புவார் என தேற்றிக்கொண்டேன்.      பி.பி.இரண்டாம்நாள்:-  இன்று கொஞ்சம் இயல்பான நிலையிலேயே மனது இருப்பதா பட்டது உடனே இந்த பதிவை எழுதிவிட்டேன் எப்போது பதிவாக ஆக்குவேன் என தெரியாது (தெரிந்தபோது  ஒன்பது நாள் ஆகிருந்தது)                                                                           பின்குறிப்பு:-பி.மு-பிரிவுக்கு முன், பி.பி-பிரிவுக்கு பின்

திங்கள், 17 மே, 2010

கள்ளக்குளிப்பு.........


தலைப்பைக் கண்ட உடன், புருவம் சுருக்கியவர்கள் இதைப்பற்றி கொஞ்சமும் தெரியாதவர்கள்(படித்த பின் ஒருவேளை தெரியலாம்), புன்னகை பூத்தவர்கள் என்னைப்போன்ற பாக்கியசாலிகள்.                                                                                          எனது ஊரின் பின்புறம் மிகப்பெரிய கண்மாய் உள்ளது. எங்களுக்கு அதுதான் அலையில்லாத கடல்.அருகிலேயே குடிதண்ணீர் கிணறும் உண்டு.சிறிய வயதுகளில் கண்மாயின் கரையோரம் இருந்த புளிய மரங்களில் பேய்(பாரதி சொன்னது வேப்ப மரம்) இருப்பதாக கூறி கண்மாய் பக்கம் போவதை கவனமாக தடுத்திருந்தனர் என் பெற்றோர்.                                                               முதல் முறையாக கண்மாய்க்கு அழைத்து சென்று கண்மாய் பற்றிய என் அறிவு கண்ணை திறந்தவர்(ன்) கண்ணன்.எதுவும் அவ்வளவாக நியாபகம் இல்லாத வயதுதான் என்றாலும், கண்மாயை கண்டு மிரண்ட பயம் இன்னும் இரண்டு ஜென்மத்திற்கு நியாபகம் இருக்கும். மொத்தமாக அவ்வளவு தண்ணீரை ஒரே இடத்தில் பார்த்தபோது வெறிநாய் கடித்தவன் தண்ணீரை கண்டு மிரள்வதை விட அதிக மாக மிரண்டு நின்றேன். கண்ணனோ என்னை ஆறுதல் படுத்தி உள்ளே அதிகம் வராமல் கரையிலே நின்னு குளிடா என்று சொல்லிவிட்டு அவன் உள்ளே இறங்கிவிட்டான்.                                         துவைப்பதற்கு பயன்படுத்தும் கல்லை இறுக்கமாக பற்றிகொண்டு காலை மெதுவாக தரையிருக்குமா என்ற சந்தேகத்துடனே உள்ளிரக்கினேன் நல்லவேளை சிறிது சகதியுடன் தரை தட்டுப்பட்டது.மற்ற காலையும் உள்ளிறக்கி ஒரளவு என்னை நிலைநிருத்திகொண்டே பற்றிய கல்லை பிரிந்தேன்.                                                        என்னைவிட பெரிய பையன்கள் எனக்கும் மேலே பாய்ந்து நீரில் குதித்து கொண்டிருந்தனர், அதன் பின்விளைவாக நான் முக்கால் வாசி நனைந்து நின்றுகொண்டு இருந்தது எவன் கண்ணை உருத்தியதோ முழுதும் நனையட்டும் என நினைத்து, நான் பின்னால் இருந்து தள்ளப்பட்டு தண்ணீரில் தள்ளப்பட்டேன்.விழுந்த வேகத்தில் கண்மாய் நீரை தீர்க்கும்  நோக்கில் வேகமாக குடிக்க தொடங்கி மூச்சு திணற தொடங்கினேன். யாரோ தலைமயிர்  பற்றி என்னை மேல் இழுப்பது தெரிந்தது, இழுத்தது யார்னு பார்த்தால் அட நம்ம கண்ணன். ஏனோ அந்த நேரத்தில் என் பிரானை காப்பாற்றியதால் கெஜட்டில் அவன் பெயரை கண்ணபிரான் என மாற்ற சிபாரிசு செய்யவேண்டும் போல இப்ப தோன்றியது.                                                     கரையில் என்னை இழுத்து வந்து முதுகில் ஒரு அடி அடித்துவிட்டு(ஒரு வேலை குடித்ததண்ணீர் வெளியாகும் நோக்கத்தில் கூட அடித்து இருக்கலாம்), கரையில் நின்னு குளிடா என்றால் உன்னை யாருடா உள்ளே இறங்க சொன்னது என்று கேட்ட கண்ணனிடம் தண்ணீரில் தள்ளிவிடப்பட்டதையோ, தள்ளிவிட்டவன் பற்றியோ எதுவும் சொல்லவில்லை, சொன்னாலும் நம்ப மாட்டான் எனபது அவன் அடித்த அடியிலேயே தெரிந்தது. ஏறக்குறைய சாவின் பக்கத்தில் சென்று வந்தது போல இருந்தது. இவ்வளவு நடந்தும் கண்மாயின் மீதுகொண்ட பாசம் அதிகரிக்கத்தான் செய்தது.                                                                                                பின்னொரு நாள் அதிசயமாக கண்மாயில் குளிக்க கிளம்பிய அண்ணனிடம்  என்னையும் அழைத்து கொண்டுபோகுமாறு  அம்மா கூறியதை நம்பமுடியாமல் திகைத்து கொண்டிருந்த போதே, என் கை பற்றி தரதரவென இழுத்துக்கொண்டு அண்ணன் நடக்க தொடங்கியிருந்தான். என்னவோ என்மேல் சிறிய கடுப்புடன் அண்ணன் இருந்ததை அவன் கைபற்றுதலிலே அறிய கூடியதாக இருந்தது. என்னை பத்திரமாக் திருப்பி அழைத்து வரவேண்டு என்ற கவலையா, இல்லை நேற்று அவன் சட்டைப்பையில் நான் சுட்ட ஐம்பது பைசாவை கண்டு பிடித்து அதன் காரணமாக என்னை கூட்டி சென்று கண்மாயில் தள்ளி கொல்லப் போகிறானோ  ...? , இவ்வாறன பல கவலையினூடையே கவலை இல்லாமல் கவலை பட்டு கண்மாயை வந்து அடைந்தேன்.                                  இவ்வளவு தைரியமாக என்னை கண்மாய்க்கு அனுப்பிய அம்மாவின் சூட்சுமம் கண்மாயை கண்ட உடன்தான் எனக்கு புரிந்தது. ஆம் வெய்யில் காலம் என்பதால் கண்மாய் தண்ணீர் எனக்கே கழுத்தலவுக்குத்தான்(அண்ணனுக்கு இடுப்பளவு(ஆழம் பிறகு கண்டுபிடித்தேன்)) இருந்தது.தண்ணீரின் அளவைக் கண்டதும் உயிர் பயம் குறைந்தது உண்மைதான். துவைக்க பயன் படுத்தும் கல் அதே இடத்தில் தான் இருந்தது கல்லில் இருந்து தண்ணீர்தான் இரண்டு நிமிடம் நடைதொலைவில் இருந்தது. மீதம் இருந்த தண்ணீரின் அளவு பயத்துடன் இருந்த என்னை இழுத்துக்கொண்டு தண்ணீரை நோக்கி அண்ணன் சென்றுகொண்டிருந்தான். அவனிடம் மெதுவாக பயமா இருக்குன்னே என்ற என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.அந்த சின்ன வயதிலேயே தினம் ஒருவனை அடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது, அடிபட்ட பையன்களின் அண்ணன்களிடம் இருந்து என்னை காப்பாற்றுவது அண்ணன்தான். என்னைப்பற்றி நன்றாக தெரியும் என்பதால் நான் பயந்ததை பற்றி அவன் அச்சர்யபட்டதில் எந்த தவறும் இல்லை.                                 எனது பயத்தால் இப்போது அவன் முகத்தில் சந்தோசமும்,பரிதாபமும் சரிவிகிதமாக கலந்து ஒளிர்ந்ததை  காணக்கூடியாதாக இருந்தது. பயப்படாதே நான் இருக்கிறேன் என்று என்னை அழைத்துக்கொண்டு தண்ணீரில் இறங்கியதையும் அவன் கைப்பற்றுதலில் உணரமுடிந்தது.ஒரு வழியாக தண்ணீரைப் பற்றிய பயம் விரைவாகவே என்னை விட்டு விலகிவிட்டது. ஒவ்வொருமுறை என்னை கரை ஏற்றுவதற்கு அண்ணன்தான் சிரமப்படுவான்                                                                                                                                      அதிக நேரம் குளிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கண்டு பிடித்த(எனது முன்னோடிகள் வைத்த பெயர் இது) விசயம்தான் கள்ளக்குளிப்பு....! எளிதாக சொல்ல வேண்டும் என்றால் வீட்டுக்கு தெரியாமல் கண்மாயில் குளிப்பது கள்ளக்குளிப்பு ஆகும்.(பரிச்சையில் பதில் எழுதிய பாதிப்பாக இருக்கலாம்) கள்ளக்குளிப்பில் நிறைய விதிமுறைகள் உண்டு. விதிமுறைகளை மீறினால் வீட்டில் மிதிபடுவது நிச்சயம்.(நிறைய மிதிவாங்கித்தான்  இந்த விதிகளை வகுத்தோம்).                                                        முதலாவதாக அணிந்து இருக்கும் உடுப்பு  நனையக்கூடாது, இரண்டாவதாக கண் சிவக்கும் முன் கரை ஏறி விடவேண்டும், மூன்றாவதாக தலை காயும் முன்பே கைகளால் தலை முடியை சரிசெய்துவிடவேண்டும், நான்காவதாக வீட்டிற்கு வேகமாக ஓடி வரவேண்டும் (கண்மாய் நீர் என்பதால் காய்ந்தவுடன் முகத்தில் வெள்ளையாக காட்டி கொடுத்துவிடும், வேகமாக ஓடி வருவதால் வியர்வையில் வெள்ளை தெரியாது). கள்ளக்குளிப்பின் மீது கொண்ட அதீத பிரியத்தால் இந்த விதிமுறைகளை நான் மீறுவது இல்லை.                                                                           சமீபத்தில் விடுமுறைக்காக ஊர் சென்று இருந்தேன் கண்மாயில் தேவையற்ற குப்பைகள், செடிகொடிகள் மண்டிக்கிடந்தன தண்ணீரை மட்டும் தான் காணவில்லை.ஆனாலும் கண்மாய் நீர் என் மனதிலும், இரத்தத்திலும்(அதான் நிறைய குடிச்சு இருக்கனே) அதிகமாகத்தான் உள்ளது.

செவ்வாய், 4 மே, 2010

சுறா.....புட்டு......

என்னத்த எழுதுறது, நம்பி,நம்பாமல் போன அனைவரையும் ஏமாற்றாமல்,ஏமாற்றி அனுப்பினர் விஜய் மற்றும் குழுவினர்(சண் தொலைக்காட்சிக்கு தமிழர்களின் மேல் உள்ள கடுப்பு மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகி உள்ளது). இப்படித்தான் படம் எடுப்பார்கள் என எதிர்பார்த்து போனதால் பெரிய பாதிப்பு இல்லை.                                  இவர்களை குறை சொல்லுவதை விட்டுவிட்டு திரைப்பட மோகத்தில் இருந்து அனைவரும் விடுபட முயற்சிக்க வேண்டும்.(முடியாது......முடியவே ...முடியாது).வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து பொருட்களின் தரங்களை நிர்ணயிப்பது வியாபாரியின் கடமை. வியாபாரத்தில் வாடிக்கையாளனே முக்கியமானவன். படம் குப்பையாக இருந்தாலும் எவன் என்ன சொன்னாலும் கேட்க்காமல் முண்டியடித்துக்கொண்டு பார்க்கும் வாடிக்கையாளன் இருக்கும் வரை இவர்கள் கொட்டம் அடங்காது.                                                                                                            மொத்த திரைப்படங்களில் பத்து விழுக்காடு நல்ல படங்கள் வருகின்றன. அந்த படங்கள் இந்த குப்பை வியாபாரிகளால் ஓரங்கட்ட படுவதும், இவ்வாறான படங்கள் அதிகமாக வருவதற்கு ஒரு காரணமாக உள்ளது. விஜய்க்கு என்ன பிரச்சினை யார் மேல் இவ்வளவு கோபம் தெரியவில்லை.இம்புட்டு கடுப்புடன் அலைகிறார்.இது அவருக்கு மட்டும் அல்ல நமக்கும் நல்லதல்ல. தமன்னாவை பற்றி ஏதாவது சொல்லலாம் என்றால் இந்தமுறை வெற்றிபெறும்  ஒரு படத்தில் நடிக்கவில்லை என்றே தோன்றியது.                                   இசை- ஏம்ப்பா உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி......? முடியல...!  (காவல்காரன் எப்ப ரிலீஸ் ஆளில்லாத தீவு இப்ப இருந்தே தேடனும்)