செவ்வாய், 4 மே, 2010

சுறா.....புட்டு......

என்னத்த எழுதுறது, நம்பி,நம்பாமல் போன அனைவரையும் ஏமாற்றாமல்,ஏமாற்றி அனுப்பினர் விஜய் மற்றும் குழுவினர்(சண் தொலைக்காட்சிக்கு தமிழர்களின் மேல் உள்ள கடுப்பு மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகி உள்ளது). இப்படித்தான் படம் எடுப்பார்கள் என எதிர்பார்த்து போனதால் பெரிய பாதிப்பு இல்லை.                                  இவர்களை குறை சொல்லுவதை விட்டுவிட்டு திரைப்பட மோகத்தில் இருந்து அனைவரும் விடுபட முயற்சிக்க வேண்டும்.(முடியாது......முடியவே ...முடியாது).வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து பொருட்களின் தரங்களை நிர்ணயிப்பது வியாபாரியின் கடமை. வியாபாரத்தில் வாடிக்கையாளனே முக்கியமானவன். படம் குப்பையாக இருந்தாலும் எவன் என்ன சொன்னாலும் கேட்க்காமல் முண்டியடித்துக்கொண்டு பார்க்கும் வாடிக்கையாளன் இருக்கும் வரை இவர்கள் கொட்டம் அடங்காது.                                                                                                            மொத்த திரைப்படங்களில் பத்து விழுக்காடு நல்ல படங்கள் வருகின்றன. அந்த படங்கள் இந்த குப்பை வியாபாரிகளால் ஓரங்கட்ட படுவதும், இவ்வாறான படங்கள் அதிகமாக வருவதற்கு ஒரு காரணமாக உள்ளது. விஜய்க்கு என்ன பிரச்சினை யார் மேல் இவ்வளவு கோபம் தெரியவில்லை.இம்புட்டு கடுப்புடன் அலைகிறார்.இது அவருக்கு மட்டும் அல்ல நமக்கும் நல்லதல்ல. தமன்னாவை பற்றி ஏதாவது சொல்லலாம் என்றால் இந்தமுறை வெற்றிபெறும்  ஒரு படத்தில் நடிக்கவில்லை என்றே தோன்றியது.                                   இசை- ஏம்ப்பா உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி......? முடியல...!  (காவல்காரன் எப்ப ரிலீஸ் ஆளில்லாத தீவு இப்ப இருந்தே தேடனும்)

1 கருத்து:

  1. விஜய் வெறியோடத்தான் இருக்காருன்னு தெரிஞ்சதுதனே... தெரிஞ்சே மாட்டிகிட்டது நம்ம விதி... ஆனாலும் உங்களோட அஜித் பாசம் எனக்கு புரியுது தல அஜித் வாழ்க!!!!!! அஜித்தோட அடுத்த படத்துக்கு என்ன சொல்றீங்கன்னு பாப்போம்..

    பதிலளிநீக்கு