நம் பாரத நாடு பெரும்பான்மையான பாமர மக்கள் வாழும் ஜனநாயக(....?)நாடு. வாக்கு பாமர மக்களின் கையில் உள்ள பேராயுதம். ஆனால் வாக்கின் தற்போதைய நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. குடம், மூக்குத்தி,பரிசுப்பொருட்கள் தந்து வாக்கு சேகரிப்பதாக முன்பொரு காலத்தில் கேள்வி பட்டுள்ளேன், சில இடங்களில் மிக ரகசியமான முறையில் நடைபெற்றதையும் அறிந்துள்ளேன். தற்போது மிக சுதந்திரமாக கட்சி வித்தியாசம் இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக(.....?) வீட்டு வாசலிலே கட்சிகளிடம் பணம் வாங்கும் மக்களை என்னவென்று சொல்லுவது...?. நவீனத்தின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியாகத்தான் இதை பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. எந்த காலத்திலும் மாறாத, மாற்ற முடியாத சக்தியாக கிராம மக்களை எண்ணி கொண்டும், இன்றுவரை நம்பிக்கொண்டும் இருப்பவன் நான். கிராமங்களில் கூட கை நீட்டி காசு வாங்கும் நிலையை நினைத்து வெட்கமாக உள்ளது. எவ்வளவு நம்பிக்கை இருந்தால் இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்களை காந்தி சொல்லி இருப்பார், இன்று அவர் இருந்தால் தனது கருத்தை மறு பரிசீலனை செய்யகூடும். ஏன் இந்த மாற்றம் கிராமங்கள் யாவும் சிறிய நகரங்களாகப்போனதால் மக்களின் தரம் தாழ்ந்து விட்டதா....?. வேப்ப மரத்தடியிலேயும், முளைக்கட்டு திண்ணையிலும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டு இருந்த மக்கள் தொலைகாட்சி பெட்டியுனுள் தஞ்சமடைந்ததால் மக்களின் மூளை மழுங்கிவிட்டதா...?. வாக்கிற்கு பணம் வாங்கினால் ஏற்ப்படும் விபரீதங்களை மக்கள் எப்படி அறியாதவர்களாக உள்ளார்கள்........? கட்சிகளுக்குள் மட்டுமே இருந்த இந்த வாக்கிற்கு பணம் வாங்கும் இந்த ஒழுக்க கேடு சகலரிடமும் எப்படி பரவியது......?. வாக்கிற்கு பணம் வாங்கும் விசயத்தில் மட்டும் பல்லிளித்து கொண்டு பணம் வாங்கும் தேவையற்ற சமத்துவம் எப்படி வந்தது....?. இனி இந்தியாவின் முதுகெலும்பை நகர மக்களை பார்க்காத காட்டில் வசிப்பவர்களிடம்தான் தேட வேண்டுமோ தெரியவில்லை கேடுகெட்ட அரசியல்வாதிகளிடம் அனைத்தையும் இழந்துவிட்டோம். இனி உயிரையும் அதற்க்கு முன்னதாக தன்மானத்தையும் இழந்துகொண்டு இருப்பதை நினைத்தால் வேதனையில் விம்முகிறது நெஞ்சு. பணத்திற்கு உடம்பை விற்பதும்,வாக்கை விற்பதும் ஒன்றாகவே பார்க்கப்பட்டால், இனிமேலாவது வாக்கிற்கு பணம் வாங்கும் வழக்கம் குறையும். வாக்கிற்கு பணம் வாங்கும் வழக்கத்தை இல்லாதொழித்து அரசியல் வேசைதனத்திர்க்கு முற்றுப்புள்ளி வைப்போம். வரும் சந்ததியர்க்கு புதிதாக எதுவும் செய்ய தேவை இல்லை. இருப்பதை கெடுக்காமல் இருக்க முயற்சி செய்வோம். நன்றி.வாழ்க பாரதம்.
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

மக்களின் உணர்வோடும் உயிரோடும் ஒன்றாகிவிட்ட ஒரு பழக்கத்தை பற்றி தோழர் வருத்தப்பட்டு இருக்கிறார்... நம் கலாச்சாரத்தோடு கலந்துவிட்ட ஒரு பழக்கம். வரும் காலங்களில் நம் கலாச்சார பட்டியலில் இதும் ஒன்றாக இருக்கும் என் கருத்து... நீங்கள் வருத்தப்படும் அளவுக்கு மக்கள் வருத்தப்பட போவதில்லை. அதை மாற்றி கொள்ள போவதுமில்லை. வாக்கிற்கு பணம் வாங்கினால் எந்த விபரீதமும் ஏற்படபோவதில்லை... பணம் வாங்காவிட்டாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படபோவதில்லை.. அரசியல் ஒரு வியாபாரம் போலவே இயங்குகிறது. ஆதலால் தோழரே வருத்தப்பட்டு பாரம் சுமக்க வேண்டாம்.
பதிலளிநீக்குஇத்தனை கடுமையான வார்த்தையை சொன்னாலும் யாரும் மாறப்போவதில்லை..

வாக்கிற்கு பணம் வாங்கினால் எந்த விபரீதமும் ஏற்படபோவதில்லை... ---என்ன தோழர் என்ன இது . விபரீதம் என்னவென்று தெரிந்தும், வாழும் காலகட்டத்தில் ஏதும் செய்யமுடியாமல் விரக்தியின் விளிம்பில் இருந்து இதனை தாங்கள் எழுதியதாகவே நான் பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு