திங்கள், 5 ஏப்ரல், 2010
அகர முதல்ல.....
மனிதம் என்பதாகவே அறியபடாத என் சிறு வயது காலத்திலேயே மனிதம் என்னுள் நிறைய விதைக்க பட்டதை இப்போது அறியமுடிகிறது. முதல்விதை தாய் தந்தையிடம் இருந்தும் தொடர்ச்சியாக என்னுடைய எதிர் வீடு (குடும்ப எதிரியின் வீடு என்றும் சொல்லலாம்) ஆசிரியர் குடும்பம் . சாலமன் வாத்தியார் என எல்லாராலும் அறியப்பட்ட அவரை நான் தாத்தா என்றே அழைப்பது வழக்கம். அவருடைய மகள் வலி பேத்திகள் மூன்று பேர் அவர்களுடைய கடைசி தம்பியாகவே நான் பார்க்க பட்டேன்(நிறைய தின்பண்டம், காசு...தருவார்கள்). அவரிடம் ஆங்கிலத்திற்கான தனிப்பயிற்சியும் பயின்றேன். எனது அம்மாவிற்கும் தாத்தாவின் மகளுக்கும்(எனது இரண்டாம் வகுப்பு ஆசிரியர்) நிறைய கருத்து மோதல்கள் தெருவில் நடைபெறும். இதன் காரணமாக சாலமன் தாத்தாவுடனான எனது தனிப்பயிற்சி ஒரு போதும் பாதிக்க பட்டது இல்லை. சில நேரங்களில் முன்புறம் சண்டை நடந்துகொண்டு இருக்கும் பின்வழியே நான் சென்று எனது பயிற்சியை தொடர்வேன். ஒரு முறை கூட அவர்களின் கோபத்தை என்மேல் காட்டியதே இல்லை. ஒவ்வொரு முறை சண்டை நடைபெறும் போதும் என்மேல் உள்ள அன்பு கூடுமே தவிர குறையாது.சாலமன் தாத்தா மறைந்த பொது மயானத்தில் ஓரமாக இருந்த என் கரம் பற்றி கூட்டத்தை விலக்கிக்கொண்டு தாத்தாவின் முகத்தை நன்றாக ஒரு முறை பார்த்துகொல்லடா என்ற பொது அழுகையை அடக்கமுடியாமல் கண்ணீர் மறைத்த பிம்பமாய் என் ஆசிரியையின் முகத்தில் நான் கண்டது மனிதத்தை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

நல்ல பதிவு... மனிதம் என்பதைவிட உங்களின் சிறுவயது அனுவங்களை சுவாரசியமாக சொல்லி இருக்கீங்க...
பதிலளிநீக்குஇதில் மனிதம் இல்லையா..? என்ன தோழரே அந்த காலகட்டத்தில் இது இயல்பான ஒரு விசயமாக இருந்தாலும் தற்போது உள்ள நிலையில் சற்று ஒப்பிட்டு பாருங்கள் பெரிய அளவு வித்தியாசம் புரியும்.
பதிலளிநீக்கு