இன்று சக ஊழியரின் இறப்பு செய்தி அறிந்து, அதிர்ந்து அதைப்பற்றி எழுத நினைத்ததின் விளைவாக தோன்றிய தலைப்புதான் விரும்பத்தக்க விரோதி. விரோதி யார் என பிறகு கூறுகிறேன், முதலில் இறந்தவர் பற்றி சில விஷயங்கள், அவர் பெயர் ஜான் ஆப்ரகாம் , ஆங்கிலேயர், திருமணமானவர்(எத்தனைமுறை என்பது தெரியாது), அனைவரிடமும் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர், முக்கியமான விஷயம் அவரது வயது 38 தான். நான் ஏன் அதிர்ந்தேன் என்பது தற்போது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். அவர் புகைபிடிப்பது இல்லை, குடிப்பது பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நன்றாக சாப்பிட கூடியவர்,பார்ப்பதற்கும் உருவம் பெருத்துதான் காணப்படுவார். முன்பே அவருக்கு உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். நேற்று இரவு மூளையில் இரத்தநாளம் வெடித்து இறந்து உள்ளார். அவரின் இறப்புக்கான காரணமாக நான் நினைத்த விரும்பத்தக்க விரோதி வேறு யாரும் அல்ல அதிகப்படியான அவரது உணவு பழக்க வழக்கம்தான். உடல் பெருத்த சக நண்பர்களுக்கு நான் உணவை குறைத்து உடற்பயிற்சி செய்ய சொல்வது உண்டு. அவர்களோ நான் குண்டாக முடியாத பொறாமையில் , அவர்களை ஒல்லியாக சொல்லுகிறேன் என நினைப்பார்கள் என நான் நினைக்கிறேன். இறுதியாக அதிகமாக உண்பவர் அனைவருக்கும் நோய் வருவது இல்லை. ஆனால் நோய் வந்த அனைவருமே அதிகம் சாப்பிடுபவர்களாகத்தான் உள்ளனர். புகை பிடிப்பவர் அனைவருக்குமே நுரையீரல் புற்று நோய் வருவது இல்லை ஆனால் புற்று நோய் வந்த அனைவருமே புகை பிடிப்பவராகவோ அல்லது புகை பிடிப்பவரின் கூட இருப்பவராகவே உள்ளார்.
புதன், 7 ஏப்ரல், 2010
விரும்பத்தக்க விரோதி..........!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

அந்த நண்பரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
பதிலளிநீக்குதோழரே சும்மா கலக்குறீங்க...
பதிலளிநீக்குஆனா நீங்க தலைவர மிஞ்சிட்டீங்க... சும்மா சுத்தி சுத்தி வேற வேற மாதிரி சொல்லி எங்களுக்கு புரிய வக்கிறீங்க...
பதிலளிநீக்கு'''இறுதியாக அதிகமாக உண்பவர் அனைவருக்கும் நோய் வருவது இல்லை. ஆனால் நோய் வந்த அனைவருமே அதிகம் சாப்பிடுபவர்களாகத்தான் உள்ளனர். புகை பிடிப்பவர் அனைவருக்குமே நுரையீரல் புற்று நோய் வருவது இல்லை ஆனால் புற்று நோய் வந்த அனைவருமே புகை பிடிப்பவராகவோ அல்லது புகை பிடிப்பவரின் கூட இருப்பவராகவே உள்ளார்.''''
பதிலளிநீக்குஆனா நீங்க தலைவர மிஞ்சிட்டீங்க... சும்மா சுத்தி சுத்தி வேற வேற மாதிரி சொல்லி எங்களுக்கு புரிய வக்கிறீங்க...
கருத்துக்களுக்கு சந்தோசம் தோழரே. நான் சுற்றி,சுற்றி சொன்னதை தாங்கள் புரிந்து கொண்டீர்களே அதுவரை சந்தோசம். முடிந்த அளவு சுற்றுவதை குறைப்பதற்கு முயற்சி செய்கிறேன், முடியுமா என்பது தெரியவில்லை, பார்ப்போம்.
பதிலளிநீக்கு