திங்கள், 5 ஏப்ரல், 2010

மனிதம்....?

தலைப்பை பார்த்தவுடன் பெரிய அளவுல ஏதாவது சொல்லுடிவேன்னு பயப்பட வேண்டாம். ஏன்னா மனிதம் என்பதற்கான அர்த்தம் தெரியாத தலை முறை தோன்றி மிக நெடுங்காலம் ஆகிவிட்டது. சில பல நேரங்களில் பயங்கர கடுப்பா இருக்கு யுவர் ஹானர். பக்கத்து வீட்டுக்காரனுக்கு தானே நமகென்னணு நாம இருந்த மாதிரி பக்கத்து வீட்டுக்காரனும் இருக்கும் பொது, நமக்கு நம் சுயநலத்தின் கேவலமான அர்த்தம் விளங்கும் ஆனால் எந்த பயனும் இல்லை. காலம் கடந்து கிடைக்கும் தீர்வு எப்படியும் வீரியமற்றுத்தான் இருக்கும், விசாரனைகைதியாக 20 வருடம் இருந்து நிரபராதி என தீர்ப்பு வருவதை போன்றுதான் இருக்கும். புதிதாக எதையும் படிக்கதேவை இல்லை, பணம் கூட செலவழிக்க தேவை இல்லை, சிபாரிசு தேவை இல்லை...இவை எல்லாம் எதற்கு என யோசிப்பீர்களே, அதான் தலைப்பு ஒன்னு வச்சுருக்கேனே அதை பெறுவதற்குதான். மனிதம் மிகுந்த மனிதர்களை நிறைய சந்தித்து உள்ளேன் அவர்களை பற்றி நிறைய பேசுகிறேன் வரும் பதிவுகளில். வணக்கம்

2 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் தோழரே... சுள்ளானுக்கு என்னுடைய ஆசிகள்... கிழி கிழின்னு கிழிக்க தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்தியது சந்தோசம் தோழரே. நீங்கள் பெற்ற துன்பம் பெருக இவ்வையம் என உள்ளுக்கள் சந்தோசிப்பது புரிகிறது .

    பதிலளிநீக்கு