செவ்வாய், 6 ஏப்ரல், 2010

சுறா....?

எத்தனை தமிழ் படம் எடுத்தாலும் திருந்த மாட்டானுக. சுறா புட்டை மன்னிக்கவும் பாட்டை கேட்ட உடனே தோன்றியது. இதில் விசையை குற்றம் சொல்வதா ஊக்குவித்த மக்களை குறை சொல்வதா என்பதே புரியவில்லை. அங்காடி தெரு போன்ற படங்களை ஊக்குவித்தாலே விசை,அசித், இன்னும் பலர் வழிக்கு வருவார்கள். ரசிகர்களும் என்ன செய்வார்கள் அவர்களுக்கு கௌரவ(..?) பிரச்சினை. அநேகமாக அனைவரும் மன நலம் பாதிக்க பட்டவர்களாக கூட இருக்ககூடும். பொழுது போக்காக மட்டுமே திரைப்படங்களை பார்க்கும் வழக்கம் இப்போது இல்லை. நடிகர்களுக்காகவே இப்போது திரைப்படங்கள் எடுக்க படுகின்றன ஆனால் பார்க்க படுகின்றனவா எனபது யோசிக்க படவேண்டிய விஷயம். கலாநிதி மாறனுக்கு பணத்தை வைத்துகொண்டு என்ன பண்ணுவது என புரியாமல் தமிழக மக்களை அனுமதி பெறாமலேயே கொடுமைபடுத்திகொண்டு இருக்கிறார். கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கு வதற்கு பல வழிகள் இருந்தாலும் அவர் திரைப்படங்கள் மூலம் மக்களை கொடுமைபடுத்துவதையே தேர்ந்தெடுத்துள்ளார் என நினைக்கிறேன். இதுவும் மறைமுக வன்முறையாகத்தான் பார்க்க வேண்டி உள்ளது. நீங்கள் நினைக்கலாம் படம்பார்க்க பிடிக்க வில்லை என்றால் பார்க்காமல் இருக்க வேண்டியதுதானே என்று. லேகியம் விற்ப்பவன் கூவி கூவி விர்ப்பதுபோல, படத்தில் பிழைத்துவிட்ட நாளே நாலு நல்ல காட்சிகளை திரும்ப திரும்ப போட்டு மக்களை குழப்பி திரைப்படங்களை பார்க்க வைப்பது வன்முறை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். அரசியல் அமைப்பு சட்டத்தில் நிறைய மாற்றம் கொண்டு வரவேண்டி உள்ளது.பொய் வாக்குறுதி குடுத்து, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளையும்,விளம்பரதாரர்களையும் தண்டிக்க புது சட்டம் கொண்டுவந்தாலும் தப்பு இல்லை. ஏன்னா இவனுக அலும்பு தாங்க முடியல...!

4 கருத்துகள்:

  1. கவுரவம் பார்க்காமல் உங்கள் அஜித்தையும் இதில் சேர்த்ததற்கு பாராட்டுக்கள்... ஜ, ஹ முதலிய எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களில் ஒன்றாகிவிட்டன.. அதனால் அவற்றை உபயோகிக்கலாம் என்பது என் கருத்து. தமிழ் குடிதாங்கி ( ராமதாஸ்) போல் தமிழை காக்க வேண்டாம்... அது வெறுப்பாகிவிடும்....

    பதிலளிநீக்கு
  2. படம் வர்றதுக்கு முன்னாடி ஏன் இந்த கொலை வெறி.. இருந்தாலும் உங்க மனச கல்லாக்கிகிட்டு அஜித்தையும் செத்ததுக்கு பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  3. mannikavum படம் வர்றதுக்கு முன்னாடி ஏன் இந்த கொலை வெறி.. இருந்தாலும் உங்க மனச கல்லாக்கிகிட்டு அஜித்தையும் சேத்ததுக்கு பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அஜித்தும்,விஜய்யும் நான் வெறுக்கும் நபர்கள் இல்லை. மக்கள் ஊடகத்தில் இருந்துகொண்டு இவர்கள் நிறைய சாதிக்க முடியும்(இவர்கள் சாதனை பணம் மட்டும்தான்). ஆனால் படம் பார்க்கும் நம்மை இவ்வளவு கேவலமாக கணித்து படங்களை எடுக்கிறார்களே என்கிறபோது எழுந்த ஆதங்கத்தின் விளைவுதான் இந்த கட்டுரை, இதில் உண்மையும் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

    பதிலளிநீக்கு